உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவிற்கு ஸ்டாலின், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர்க்கு அழைப்பு

மும்பை: மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சோனியா காந்திக்கு, சிவசேனா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கிறார். மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் முதலமைச்சர்களுக்கும் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: