நாங்களும் போடுவோம்ல... கோசாலை பசுக்களுக்கு ஸ்வெட்டர்கள் தயாரிப்பு: அயோத்தி நகராட்சி நடவடிக்கை

அயோத்தி:  அயோத்தி நகராட்சிக்கு உட்பட்ட கோசாலைகளில் உள்ள பசுக்கள், காளைகள் மற்றும் கன்றுகளுக்கு சணலால் ஆன ஸ்வெட்டர் வழங்க திட்டமிட்டு அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குளிர் மேலும் அதிகரிக்கக்கூடும். இந்நிலையில் குளிரை சமாளிக்கும் வகையில் அயோத்தி நகராட்சியால் நிர்வகிக்கப்படும் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு ஸ்வெட்டர் தயாரிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.30 லட்சம் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே பசுக்களை பராமரிப்பதற்காக தனியார் மற்றும் அரசு கோசாலைகளுக்கு ஆண்டுக்கு ரூ.30 முதல் 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இந்த பட்ஜெட் தொகை அதிரிக்கப்படும். ஸ்வெட்டர் வழங்கும் திட்டம் 3 கட்டங்களாக  நிறைவேற்றப்படுகிறது. முதல்கட்டமாக பைசிங்பூர் பசுக்கள் காப்பகத்தில் இந்த ஸ்வெட்டர் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இங்கு 1100 பசுக்கள் மற்றும் 100 கன்றுகள் பராமரிக்கப்படுகிறது.

இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் சுக்ரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய சுக்லா கூறியதாவது: உள்ளூர் சாதுக்களுடன் கலந்தாலோசனை செய்த பின்னர்தான் நகராட்சி இந்த முடிவை எடுத்தது. முதலில் கன்றுகளுக்கு அணிவிக்கும் வகையில் 100 ஸ்வெட்டர்கள் அனுப்பி வைக்கும்படி கோரப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இவை வழங்கப்பட்டுவிடும். சணலால் தயாரிக்கப்படும் இவற்றின் விலை ரூ.250 முதல் ரூ.300 ஆகும். இரண்டாவது கட்டமாக பசுக்களுக்கு ஸ்வெட்டர் வாங்கப்படும். அதன் பின்னர் மூன்றாவது கட்டமாக காளைகள் மற்றும் எருதுகளுக்கு ஸ்வெட்டர் அணிந்து பராமரிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: