மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் மன்மோகன் பேச்சு

மாநிலங்களவையின் 250வது கூட்டத் தொடரை முன்னிட்டு, இந்திய அரசியலில் மாநிலங்களவையின் பங்கு என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில்,‘‘சில விஷயங்களில் மாநிலங்களவைக்கு, நிர்வாகம் அதிக மதிப்பு அளிக்க வேண்டும். ஆனால், இப்போது அதுபோல் இல்லை. உதாரணத்துக்கு, ஒரு மாநிலத்தின் எல்லைகளை மாற்றியமைத்து, யூனியன் பிரதேசங்களாக மாற்றும்போது, இது பற்றி ஆய்வு செய்ய மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்கும் முன், மாநில அரசுடன் மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: