உசிலம்பட்டி அருகே கிடா முட்டு பயிற்சி

உசிலம்பட்டி :  உசிலம்பட்டி அருகே அல்லிகுண்டம்-அயோத்திபட்டி தெப்பத்திற்கு இடையே உள்ள ஈஸ்வரிகோயில் வாசலில் பயிற்சிக்காக சிறிய அளவில் கிடாய் முட்டுக்கள் நடைபெற்றன. அதில் மானூத்து மற்றும் சின்னக்கட்டளையைச் சேர்ந்த செம்மறி கிடாய்கள் மோதிக்கொண்டன. இந்த கிடாய்கள் இரண்டும் தொடர்ந்து முட்டிக்கொண்டன, இதில் இரண்டு கிடாய்களுமே சமநிலையில் நின்றன. தமிழர்களின் பண்பாட்டிற்கான பழங்கால விளையாட்டுப் போட்டிகளில் இந்த கிடாய் முட்டு போட்டியும் பெயர் பெற்றவை. இப்பகுதியில் முட்டுக்கிடாய்கள் பயிற்சி பெற்று வருகின்றன. தமிழர் திருநாள் தைத்திருநாளுக்கு முட்டுக்கிடாய்கள் தயார் நிலையில் உள்ளன. இந்தப்போட்டி நடத்துவதற்கு முறையாக அனுமதி பெற்று நடப்பதற்காக முட்டு கிடாய் வளர்க்கும் ஆர்வலர்கள் ஆவலாய் உள்ளனர். கிடா முட்டு பயிற்சியைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர்.

Related Stories: