கார், வங்கி, இன்டர்நெட் இல்லாத ஊர்!

நன்றி குங்குமம் முத்தாரம்

மெக்சிகோவின் அழகை பிரதிபலிக்கிறது ஐஸ் லா ஹால்பாக்ஸ் தீவு. 42 கிலோ மீட்டர் நீளம் மற்றும் 1.5 கிலோ மீட்டர் அகலத்தில் பரந்து விரிந்திருக்கும் ஹால்பாக்ஸ், பறவைகளின் சொர்க்கமாக திகழ்கிறது. இந்த ஊருக்கு செல்லும் பாதையில் கார்  நுழைய முடியாது. ஊருக்குள் வங்கி, அஞ்சலகம் இல்லை. 1987-இல்தான் மின்சாரம் ஊரை எட்டிப் பார்த்தது. உயரமான கட்டடங்களைக் கட்ட அனுமதியில்லை.

வை-பை சிக்னல் கிடைக்காது. கூகுள் மேப்பால் கூட அடையாளம் காணமுடியாத ஒரு ஊர். இருந்தாலும் இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கிறது. மக்கள் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன.  நவீன வசதிகள் இல்லையென்பதால் சுற்றுலாப் பயணிகள் ஹால்பாக்ஸை சீண்டுவதில்லை. சமீபத்தில் ‘நேஷனல் ஜியோகிராபிக்’ சேனல், ‘மெக்சிகோவின் அழகான தீவு’ என்று புகழாரம் சூட்டி ஹால்பாக்ஸைக் கொண்டாடியிருக்கிறது.

Related Stories:

>