நேரு பிறந்த நாளை இறந்த நாள் என்று கூறிய அமைச்சர் : கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் எம்.எம்.மணி. அடிக்கடி ஏதாவது வில்லங்கமாக பேசி சர்ச்சையில் சிக்குவார். பதவியில் இருந்த 2 ஆண்டுகளில், தனது காருக்கு 34 டயர்களை மாற்றியது சமீபத்தில் புது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இடுக்கி மாவட்டத்தில் நடந்த விழாவில், ‘‘இன்று மகத்தான நாள். ஜவகர்லால் நேரு இறந்த நாளாகும். அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்,’’ என்றார். நேருவுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தனது தவறுக்காக மணி மன்னிட்டு கேட்டுள்ளார்.

Related Stories:

>