இன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்

உலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். உலகம் முழுவதும் நவம்பர் 20 ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாட பட்டு வந்தாலும் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப் படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர் லால் நேரு. நேரு குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளை கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்து குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் குறித்து தன்னம்பிக்கை தேசிய பயிற்சியாளர் பொறியாளர் சம்பத் கூறுகையில், கள்ளம் கபடமற்ற வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். அவர்களை நல்வழிப்படுத்தி எடுத்து சென்றால் மட்டுமே ஒரு நாடு சிறப்பு பெரும். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் குழந்தைகளே. அவர்களை சரியான பாதையில் வளர்ப்பதன் மூலமே நாடு வளர்ச்சியடையும் என்று நேருவும், இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர் ஆகும்போது அவர்கள் கையில் தான் இந்தியா வல்லரசு ஆவது உள்ளது என டாக்டர் அப்துல் கலாம் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்றைய சூழலில் ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பது சவாலாக உள்ளது. பெற்றோர்கள் அந்த சவாலை நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பிறந்த, வாழ்ந்த காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி வேறு, இன்று இருக்கும் விஞ்ஞான வளர்ச்சி வேறு என்பதை உணர வேண்டும். நாம் வளர்ந்த விதத்தில் நம் குழந்தைகளை வளர்க்கும் போது கடினம், கட்டுப்பாடும், பெற்றோருக்கு அஞ்சியும் நாம் வளர்ந்த கதைகள் இப்போது செல்லாது.

இன்றைய நம் சந்ததிகள் அறிவிலும், பரிணாம வளர்ச்சியில் நம்மை விட சிறப்பானவர்கள், அதுவே இயற்கை, அதுகுறித்து நாம் பெருமைப்பட வேண் டும். அப்படி பட்டவர்களை அன்பால் கட்டுப்படுத்தி நல்வழியில் வெற்றி குழந்தையாக எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து நாம் தான் பயிற்சி பெற வேண்டும். நமக்கு மறு பிறவி ஒன்று உண்டென்றால் அது நம் குழந்தைகள் தான். நம் குழந்தைகள் அடையும் உயரம் நாம் அடையும் உயரம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். நம் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்காமல் அவர்கள் விருப்பத்தில் வெற்றி பெற துணை நிற்க வேண்டும். இந்த உலகத் திற்கு மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் மட்டும் தேவை ப்படவில்லை.

நூற்றுக்கணக்கான தொழில் வல்லுனர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர் கள் தேவைப் படுகிறார்கள். நிச்சயம் உங்கள் குழந்தையின் ஆசை அதில் ஒன்றாகத்தான் இருக்கும். எனவே அவன் விருப்பப்பட்ட துறையில் சாதிக்க பெற்றோர் நிற்பதே சிறந்தது. காலத்திற்கு தகுந்தாற்போல் பெற்றோர்கள் மாறாமல் குழந்தைகளை குறை சொல்வது வேடிக்கை. பெற்றோர்கள் தினமும் தங்கள் குழந்தையுடன் பேச நேரம் ஒதுக்குங்கள். அன்றைய அவர்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளிடம் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெற்றோர்கள் குறிப்பாக தாய் விவாதிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு மனித நேயத்தை ஒவ்வொரு நாளும் சொல்லித்தர வேண் டும். எதிர் காலத்தில் அவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அவர்கள் பணியில் மனிதம் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் விதைக்க வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பில் மற்றும் வெற்றியில் பெற்றோர்கள் நாம் எந்த நிலையிலும் துணை நிற்போம். மேலும் வெற்றி தோல்வி இரண்டிலும் அவர் களுக்கு துணை நிற்போம் என்கிற உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டி விட்டால், இந்த மண்ணில் எல்லா குழந்தையும் வெற்றி பெறும். நமது குழந்தை நமது எதிர்காலம், நமது நாட்டின் ஆதாரம். இவ்வாறு தன்னம்பிக்கை தேசிய பயிற்சியாளர் சம்பத் கூறினார்.

Related Stories:

>