லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: பிரபல  பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், மூச்சுத் திணறல்  காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர், மும்பையில் வசித்து வருகிறார். அவருக்கு நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லதா மங்கேஷ்கர் கடந்த செப்டம்பர் 28ல்தான் 90வது பிறந்த நாளை கொண்டாடினார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

லதா மங்கேஷ்கர், இந்தியாவில் மிக அதிகமான மொழிகளில் பாடியவர் என்ற புகழ்பெற்றவர். அவர் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’, ‘பத்ம பூஷண்’, ‘பத்ம விபூஷண்’ விருதுகளைப் பெற்றவர். இதுமட்டுமின்றி ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

Related Stories:

>