(8.1.2026 முதல் 14.1.2026 வரை)
சாதகங்கள்: தன குடும்ப அதிபதி சுக்கிரன் பாக்கியத்தில் இருப்பது சிறந்த அமைப்பு. லாப ஸ்தானத்தில் ராகு இருப்பதால் தொழில் முயற்சிகளையும், லாபத்தையும் அளிப்பார். சூரியனோடு இணைந்து இருப்பதால் எந்த விஷயத்தையும் யோசித்து முடிவெடுப்பீர்கள். குரு – சுக்கிரன் பார்வையாலும் ஒன்பதாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதாலும் பொருளாதாரத்தில் நல்ல உயர்வு இருக்கும் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். ஐந்தாம் இடத்து சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் ஆத்ம பலம் அதிகரிக்கும்.
கவனம் தேவை: செலவுகளில் சிக்கனம் தேவை. வாரத்தின் மத்தியில் புதன் 10-ஆம் இடத்துக்கு மாறுகிறார் சிலருக்கு இட மாற்றங்கள் ஏற்படும். பிறர் விஷயங்களில் தலையிட வேண்டாம். நீங்களாகவே கருத்து கூற வேண்டாம். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 13.1.2026 மாலை 5.21 முதல் 16.1.2026 காலை 5.48 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: அபிராமி அந்தாதியின் ஏதாவது ஒரு பாடலை விளக்கு வைத்துச் சொல்லுங்கள்.
