உலகிலேயே விலை உயர்ந்த கழிவறைத்தொட்டியை உருவாக்கி சீனா கின்னஸ் சாதனை

உலகிலேயே விலை உயர்ந்த கழிவறைத் தொட்டி என்ற சாதனை சீனாவில் படைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறைத் தொட்டி முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டது. மனிதர்கள் அமரும் பகுதியில் 335 கேரட் எடையிலான 40 ஆயிரம் வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. வைரங்கள் பொதியப்பட்டுள்ள பகுதி புல்லட் புரூஃப் எனப்படும் துப்பாக்கித் தோட்டாவால் துளைக்கமுடியாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தங்கக் கழிவறை ஹாங்காங்கைச் சேர்ந்த ஆரோன் ஷம் என்ற நகைக்கடையில் தயாரிக்கப்பட்டு ஷாங்காய் நகரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தக் கழிவறையை விற்க மனமில்லை என்று கூறிய ஆரோன் ஷம் நிறுவன உரிமையாளர் இதனை அருங்காட்சியகத்தில் வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் கழிவறைதான் உலகிலேயே விலை உயர்ந்தது என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

Related Stories:

>