‘தேசத்தின் மகன்’ காந்தி சாத்வி மீண்டும் சர்ச்சை

போபால்: ‘‘மகாத்மா காந்தி, இந்த தேசத்தின் மகன்’’ என பாஜ எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜ.வைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர். இவர் சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதில் வல்லவர். இதேபோல் மக்களவை தேர்தலும் பல சர்ச்சைக் கருத்துக்களை கூறி, கட்சித் தலைமையிடம் வாங்கிக் கட்டினார். அதைத் தொடர்ந்து சிறிது காலம் அமைதிக் காத்தார். இந்நிலையில், மீண்டும் அவர் தனது கச்சேரியை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சாத்வி பிரக்யாசிங், ‘‘மகாத்மா காந்தி இந்த தேசத்தின் மகன். அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். அதற்கு மேல் எந்த விளக்கமும் நான் தரதேவை இல்லை. காந்தியின் கொள்கைகளின்படி நடப்பேன்’’ என்றார். மகாத்மா காந்தி, தேசத்தின் தந்தை என்றுதான் அழைக்கப்படுகிறார். அவரை திடீரென தேசத்தின் மகன் என்று பிரக்யா சிங் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: