குன்றக்குடி முருகன் கோவிலில் 27ம் தேதி கந்தசஷ்டி துவக்கம்

*2ம் தேதி சூரசம்ஹாரம்

காரைக்குடி :  காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் வரும் 27ம் தேதி முதல் கந்தசஷ்டி விழா துவங்குகிறது. 2ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கவுள்ளது. காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோவிலில் கந்தசஷ்டி விழா 27ம் தேதி தேவ ரகசியத்துடன் துவங்குகிறது. 28ம் தேதி முதல்நாள் ஆறுமுகச் செவ்வேள் எழுந்தருளல்,  சூரபத்மன் எதிரெழுந்து வரல் நிகழ்ச்சி நடக்கும். 29ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி  வரை ஆறுமுகச் செவ்வேல், சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் எதிரெழுந்து வரல் நிகழ்ச்சி நடக்கிறது.  

6ம் நாளான 2ம் தேதி மாலை 4 மணிக்கு ஆறுமுகச் செவ்வேல் அம்மையிடம் சக்திவேல் வாங்குதல்,   மாலை 4.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் ஆறுமுகச் செவ்வேல் எழுந்தருளல், 5.30 முதல் 6.30க்குள்  சூரசம்ஹாரம் நடக்கிறது.  3ம் தேதி காலை 11 மணிக்கு திருமுழுக்காட்டு, மாலை 6 முதல் 6.45 க்குள் தெய்வானை திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு தங்கரதத்தில் ஆறுமுகச் செவ்வேல் எழுந்தருளல் நடக்கிறது.

இதனை தொடந்து வெள்ளி ரதம், யானை வாகனம், மற்றும் கடா வாகனங்களில் ஆறுமுகச் செவ்வேல், விநாயகர், பாலசுப்பிரமணியர், முத்துக்கந்தர், வீரவாகு தேவர், தண்டாயுதபாணி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார்  தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Related Stories: