அச்சமூட்டும் பனிமலையில் குதிரை சவாரி செய்த வடகொரிய அதிபர்

வடகொரிய எல்லை அருகே பனிப்பிரதேசத்தில் உள்ள புனித பாக்டு மலையில் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் குதிரையில் சவாரி செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அணு ஆயுத சோதனை மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தற்போது ஒரு வித்தியாசமான வைரலை ஏற்படுத்தியுள்ளார்.

Advertising
Advertising

அடர்ந்த பனிகளுக்கு இடையேயும், மரங்களுக்கு இடையேயும் கிம் குதிரையில் அமர்ந்தபடி பயணம் மேற்கொண்டார். அதிபர் கிம் ஜாங் உன்னின் சந்தோஷமான தருணத்தை பார்த்த அதிகாரிகள் கிம் ஜாங் உன்னின் இந்த பயணம் வடகொரிய புரட்சியில் முன்னேற்றமடைய வழிவகுக்கும் என்று கூறியிருக்கின்றனர்.

Related Stories: