உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் ‘கம் வால்’

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள ‘கம் வால்’ எனப்படும் சுவர், உலக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. 1990களில் விளையாட்டாக சியாட்டில் நகரில் உள்ள சுமார் 46 மீட்டர் நீள சுவர் ஒன்றில் மக்கள் பபுள் கம்களை மென்று, ஒட்டத்தொடங்கினர். இதனால் சுவர் முழுவதும் பபுள் கம் ஒட்டப்பட்டு, அருவறுப்புடன் காட்சியளிக்கவே, அங்குள்ள மார்க்கெட் நிர்வாகம் அதனை சுத்தம் செய்தது. இருப்பினும், இதுபோல் பபுள்கம்களை ஒட்டி, படங்களை வரைந்து, சுவர்களில் அன்பை வெளிக்காட்டும் வாசகங்களை மக்கள் தொடர்ந்து எழுதி வந்தனர்.

Advertising
Advertising

இதையடுத்து கடந்த 1999ம் ஆண்டு, அந்த சுவர் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டது. அதுமுதல் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். 30 ஆண்டுகளாக வண்ணமிகு நிறத்துடன் காட்சியளிக்கும் இந்த சுவரை பலர் ரசித்தாலும், சிலர் அருவறுப்புடன் முகத்தை சுளித்தபடி விலகி செல்கின்றனர்.

Related Stories: