சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் செயல்படாத தானியங்கி படிக்கட்டு: பயணிகள் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்தில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் 1 லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு தானியங்கி படிக்கட்டுகளும், மின் தூக்கிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி படிக்கட்டு செயல்படுவதில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல 5 சுரங்கப்பாதைகள் உள்ளன. இதில், எம்.எம்.சி, ரிப்பன் மாளிகை, பார்க் ஸ்டேசன் பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகளில் தானியங்கி  படிக்கட்டுசெயல்படுவதில்லை. இதனால், அதிக எடை கொண்ட பொருட்களை கொண்டுசெல்ல முடிவதில்லை. மின்தூக்கிகளும் முறையாக செயல்படாததால் வயதானவர்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும்  நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: