பாபர் மசூதி இடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் கல்யாண் சிங் ஆஜர்

லக்னோ: அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992ல் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பாஜ தலைவர்கள்  அத்வானிஉள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.  இந்த  சம்பவத்தின்போது உபி முதல்வராக பாஜ.வை சேர்ந்த கல்யாண் சிங்இருந்தார்.  இவர் ராஜஸ்தான் ஆளுநராக இருந்ததால், இந்த வழக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜரானார்.

Related Stories: