இந்தியாவில் 40 சதவீத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

ஆக்ரா: இந்தியாவில் 40 சதவீத வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்குகின்றன என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. ஒன்றிய அரசின் விபத்து அறிக்கை தரவுகளில், சாலை விபத்துகளில் 60 சதவீத வாகனங்களுக்கு மட்டுமே மூன்றாம் நபர் இழப்பீடு வழங்கப்படுகிறது. மற்ற 40 சதவீத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லாததால் விபத்துக்குள்ளான நபர் இழப்பீடு கோர முடியாமலும், நஷ்ட ஈடு கோர முடியாமலும் தவிக்கின்றனர். இதுகுறித்து வழக்கறிஞர் ஜெயின் தனது மனுவில், மோட்டார் வாகன சட்டம் 136ன் படி வாகனங்கள் போக்குவரத்து விதிகளுக்கு உட்படுவதை மின்னணு கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும்.

இதன் மூலம் வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் உள்ளதா எனபதை கண்டுபிடித்து, இல்லையென்றால் அபராதம் விதிக்கலாம் என கூறியிருந்தார். மேலும் மோ.வ.ச-146ன் படி அனைத்து வாகனங்களிலும் இன்சூரன்ஸ் சான்றிதழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும், இல்லையென்றால் 196 விதிப்படி மூன்று மாதம் சிறை அல்லது ₹2000 அபராதம் விதிக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் மூன்று மாதம் சிறை அல்லது ₹5000 அபராதம் விதிக்க வேண்டும் என கூறினார். இந்நிலையில் கடந்த 2018-19 ம் ஆண்டில் இன்சூரன்ஸ் கன்பெனி மூன்றாம் நபரிடம் இருந்து ₹38,046 கோடி வசூலித்துள்ளது.

இந்த தொகை கடந்த 2022-23ம் ஆண்டில் ₹49,508 கோடியாக உயர்ந்துள்ளது. 2023-24 நடப்பாண்டில் இந்த தொகை ₹50000 கோடியாக உயரும். இந்தியாவில் 40 சதவீத வாகனங்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்குகின்றன என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒன்றிய நிதியமைச்சர் மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், லச்சத்தீவுகளில் உள்ள 30.4 கோடி வாகனங்களில் 16.5 கோடி வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை என கூறியுள்ளார்.

The post இந்தியாவில் 40 சதவீத வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: