2 நிரந்தர நீதிபதிகள் கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் 2 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கூடுதல் நீதிபதிகளான நீதிபதி சுஸ்மிதா புகான் கவுண்ட் மற்றும் நீதிபதி மிதாலி தாகுரியா ஆகியோரை கவுகாத்தி உயர் நீதிமன்ற நிரந்த நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைக்கிறது.

இதே போல, நீதிபதி ராஜேஷ் சேக்ரியை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக, மேலும் ஓராண்டுக்கு நியமிக்க பரிந்துரைக்கப்படுகிறார். புதிய பதவிக்காலம் வரும் ஜூலை 29ல் இருந்து தொடங்கும்’ என கூறப்பட்டுள்ளது.

The post 2 நிரந்தர நீதிபதிகள் கொலிஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Related Stories: