குடமிளகாய் சாதம்

செய்முறை : பாஸ்மதி அரிசியை குக்கரில் வைத்து சாதம் உதிரியாக வரும்படி வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தை சேர்க்கவும். வறுபட்டதும் நறுக்கிய பல்லாரியை சேர்த்து வதக்கவும். பல்லாரி வதங்கியதும் பொடியாக நறுக்கிய குடமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் உப்பு, சாம்பார்ப்பொடி, கரம் மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், தேங்காய்த்துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும். இதில் வடித்த சாதத்தை போட்டு நன்றாக கலக்கவும்.  மாறுபட்ட சுவையில் குடமிளகாய் சாதம் ரெடி.

Related Stories: