கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ‘வதைக்கும்’ வட்டக்கானல் சாலை: சீரமைக்க கோரிக்கை

கொடைக்கானல்: கொடைக்கானல் வட்டக்கானல் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது வட்டக்கானல். இங்கு 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து கொடைக்கானலுக்கு 14 கிலோ மீட்டர் தூர சாலை உள்ளது. இதில் வட்டக்காணலில் இருந்து பாம்பார்புரம் வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்து படுமோசமாக உள்ளது.

வட்டக்கானல் பகுதியில் ‘டால்பின்நோஸ்’ சுற்றுலா தளம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், சாலை சேதமடைந்துள்ளதால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மேடு, பள்ளம் தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சாலையை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: