கும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லை: ஜார்க்கண்ட் போலீசாரின் தகவலால் அதிர்ச்சி..கொலை வழக்கு பிரிவுகளும் கைவிடப்பட்டன!

ராஞ்சி: கும்பல் தாக்குதலில் தப்ரேஸ் அன்சாரி இறக்கவில்லை என்று, ஜார்க்கண்ட் போலீசார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 17ம் தேதியன்று, ஜார்கண்ட் மாநிலம் சராய்கேலா - கர்சவான் மாவட்டத்தில், தப்ரேஸ் அன்சாரி என்ற முஸ்லீம் இளைஞர் தாக்குதல் நடப்பட்டது. அன்சாரி வாகனங்களை திருடியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவரை கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல், ஜெய் ஸ்ரீ ராம் மற்றும் ஜெய் ஹனுமான் போன்ற முழக்கங்களை கூறி சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர். ஒரு இரவு முழுவதும் அவரை இரக்கமில்லாமல் தாக்கியதில் பலத்த காயமடைந்த சிகிச்சை பலனளிக்காமல் சில நாட்களில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தப்ரேஸ் அன்சாரி மரணத்துக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டதுடன், 2 போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்த 11 பேர் மீதும், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது குற்றவாளிகள் 11 பேர் மீதான கொலை வழக்கு பிரிவுகள் கைவிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜார்க்கண்ட் போலீசார், பிரேத பரிசோதனையில் தப்ரேஸ் அன்சாரி மாரடைப்பால் இறந்தார் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்தே கொலை வழக்கு பிரிவுகள் கைவிடப்பட்டுள்ளன, என்று கூறியுள்ளனர். ஜார்கண்ட் மாநில போலீசாரின் இந்த பதில், மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: