மறுமதிப்பீட்டிற்கு ரூ.67,000 கட்டணம் காட்டியது எப்படி? சிபிஎஸ்இ வெப்சைட்டில் சைபர் தாக்குதல்: 50 மாணவர்கள் ஊருடுவியதாக தகவல்

புதுடெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் இந்தாண்டு ஆசிரியர்கள் கையால் திருத்துவதற்கு பதிலாக ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் (ஓஎஸ்எம்) எனும் டிஜிட்டல் வழி மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பார்த்து திருத்தி மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்த புதிய முறையால் தங்களுக்கு மதிப்பெண் குறைந்ததாக பல மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் பலரும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பம் செய்தனர். அப்போது மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்ப கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ.67,000 அல்லது ரூ.68,000 என காட்டியதால் மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.  இது குறித்து சிபிஎஸ்இ தரப்பில் நேற்று வெளியான தகவலில், ‘‘மறுமதிப்பீட்டு இணையதளத்தின் மீது சைபர் தாக்குதல் நடந்தது. அந்த சமயத்தில் தனியார் வங்கியின் பேமென்ட் கேட்வே வசதியில் 50 மாணவர்கள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் வேடிக்கையாகவோ அல்லது தீங்கிழைக்கும் நோக்கத்துடனோ மறுமதிப்பீட்டு கட்டணத்தை ரூ.1 என்றும் ரூ.67 ஆயிரம் அல்லது ரூ.68 ஆயிரம் என்றும் மாற்றி உள்ளனர். அதனால்தான், 50 மாணவர்களின் கணக்குகளில் கட்டண தொகை மாற்றங்கள் நடந்திருக்கின்றன’’ என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, மறுமதிப்பீடு தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் புதிய இணையதளம் நாளை (ஜூன் 1) முதல் செயல்பாட்டிற்கு வரும் என சிபிஎஸ்இ ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: