உம்ரோய்: மேகாலயா மாநிலம் ரி போய் மாவட்டத்தின் உம்ரோய் ராணுவ தளத்தில் பிரகதி 2026 என்ற பெயரில் கடந்த 20ம் தேதி தொடங்கிய கூட்டு ராணுவ பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தோ-பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நாடுகளிடையே கிளர்ச்சியை எதிர்கொள்வது, ராணுவங்களுக்கிடையே கூட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், பரஸ்பர நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு பிரகதி 2026 பயிற்சி நடத்தப்பட்டது.
இந்த பயிற்சியில், இந்தியா, பூட்டான், கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், சீஷெல்ஸ், இலங்கை, மற்றும் வியட்நாம் ஆகிய 13 நாடுகளை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், மலை மற்றும் அடர்ந்த காட்டு பகுதிகளில் தீவிரவாதிகளை எதிர்கொள்வது, தந்திரோபாய நடவடிக்கைகள், கண்ணிவெடிகளை கண்டுபிடிப்பது மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தாக்குதல்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
