பாட்னா: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி. இவர் 1997ம் ஆண்டு முதல 2005ம் ஆண்டு வரை எட்டு ஆண்டுகள் பீகார் முதல்வராக பதவி வகித்துள்ளார். ராப்ரி தேவி கடந்த 20 வருடங்களாக பாட்னாவின் சர்க்குலர் சாலையில் உள்ள 10ம் எண் கொண்ட அரசு பங்களாவில் வசித்து வருகிறார்.
இந்த சூழலில் பீகாரில் தற்போது முதன்முறையாக பாஜ ஆட்சி பொறுப்பேற்று, சாம்ராட் சவுத்ரி முதல்வராக பதவி ஏற்றார். இந்த அரசில் மாநில கட்டிட கட்டுமான பணி துறை கடந்த 29ம் தேதி வௌியிட்ட அறிவிப்பில், ராப்ரி தேவி வசிக்கும் அரசு பங்களாவை, பீகார் மீன்வளத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நந்த் கிஷோர் ராமுக்கு ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது. ராப்ரி தேவிக்கு வேறு அரசு பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராப்ரி தேவி, “சமீபத்தில் முதல்வர் பதவி ஏற்ற சாம்ராட் சவுத்ரி உற்சாகமாக இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. ஆனால், உத்தரவுப்படி நான் சர்க்குலர் சாலை அரசு பங்களாவை காலி செய்ய மாட்டேன். முடிந்தால் அவர் என்னை வலுக்கட்டாயமாக வௌியேற்றட்டும்” என ஆவேசமாக தெரிவித்தார்.
