தேசிய சோரியாசிஸ் விழிப்புணர்வு மாதம் : நோயின் அறிகுறிகளும் சிகிச்சை முறைகளும்

சோரியாசிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதோடு இந்நோய் குறித்த முழுமையான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் தேசிய சோரியாசிஸ் விழிப்புணர்வு மாதமாக (Psoriasis Awareness Month) அனுசரிக்கப்படுகிறது.

சோரியாசிஸ் என்பது வறண்ட சருமம் போல் வெளிப்புற காரணிகளால் ஏற்படுவது அல்ல. சோரியாசிஸ் என்னும் சொரி சிரங்கு, உடலில் நீண்ட நாட்களாக வளரும் ஒரு நோய்த் தொற்று.

நீரிழிவு, கீல்வாதம், மன அழுத்தம் போன்ற காரணிகளால் இந்நோய் ஏற்படுகிறது. உடலின் எதிர்ப்பு சக்தி, தேவையற்ற இடங்களில் அதிக சருமச் செல்களை உருவாக்கக்கூறி தவறுதலாக மூளைக்கு தகவல் அனுப்புவதன் மூலம் இந்நோய் ஏற்படுகிறது. மூன்றில் ஒரு பங்கு சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுக்காரர்களுக்கும் இந்நோய்  இருப்பதாகவும், அதனால் இவர்களுக்கும் வந்துள்ளதாகவும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தோல் வெடிப்புகளை பற்றி பேசும்போது, பாதங்களில் ஏற்படும் வெடிப்பை பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலும் சோரியாசிஸ் என்பது கொப்பளம் போல் புண்களாக இருக்கிறது.

இந்நோய் உடலில் அதிகளவு தோல் உற்பத்தியாவதால் ஏற்படுகிறது. பொதுவாக உச்சந்தலை, கை, கால் முட்டிகள், பாதங்களில்தான் சோரியாசிஸ் வருவதாக கூறப்படுகிறது. 80 முதல் 90 சதவிகித சோரியாசிஸ் நோயாளிகளுக்கு படர், சிரங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. வறண்ட சருமமும் சோரியாசிஸ் நோயும் ஒன்று போலவே முதலில் தோன்றினாலும், சோரியாசிஸ் என்பது அதிகப்படியான அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

சோரியாசிஸ் அறிகுறிகள்

குளிர் மற்றும் வெயில் காலங்களில் எல்லோருடைய சருமமும் சற்று வறண்டு போய் வெடிப்புகளாக காட்சியளிக்கும். முகத்தில் கூட தோல் வறண்டு, திட்டு திட்டாகத் தெரிவதோடு, கை, கால் பகுதிகளிலும் தோல் வறண்டு, அரிப்பு ஏற்படுவது போன்ற உணர்வைத் தரும். சோரியாசிஸ் எனப்படும் சொரி சிரங்கும் இதே அறிகுறிகளை கொண்டுள்ளதால், உங்களுக்கு இருப்பது வெறும் வறண்ட தோல்தானா அல்லது சோரியாசிஸா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.

குளிர்ந்த வானிலை, காற்றில் குறைந்த நீர்ப்பதம், அதிகமாக தண்ணீரால் கழுவுவது, கடினமான சரும பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவது, அதிக நேரம் கொதிக்கும் நீரில் குளிப்பது, அதிவேகமாக காற்று தொடர்ந்து வீசுவது போன்ற காரணங்களால் சரும வறட்சி ஏற்படுகிறது. மேலும் போதிய அளவு ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது, தேவையான அளவு நீர் உட்கொள்ளாதது, தைராய்டு பிரச்னையால் வருவது போன்ற பல காரணிகள் சருமத்தை வறண்டு போகச் செய்கின்றன.

சோரியாசிஸ் சிகிச்சை

சோரியாசிஸ்க்கு இன்னும் நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதை போதிய அளவு குறைக்க வழிமுறைகள் உள்ளது. வளராமல் தடுத்து இந்நோயை நாம் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

மருத்துவரை அணுகி நம் உடல்வாகிற்கு ஏற்ற சரும பாதுகாப்பு கிரீம்களை பயன்படுத்துவது அவசியம். மேலும் தீவிர சிரங்கு, படர் ஏற்பட்டவர்கள் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் போட்டுக்கொள்ள நேரிடலாம். எனவே, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

சோரியாசிஸ் உள்ளவர்கள் பெரும்பாலும் உணவு பழக்கத்திலேயே அவற்றைக் கட்டுப்படுத்தலாம். ஒமேகா 3 அமிலங்கள் இருக்கும் கொட்டை வகைகள், விதைகள், மீன் போன்றவற்றை உண்பது மிகவும் நல்லது. வைட்டமின் டி அதிகமுள்ள செறிவூட்டப்பட்ட பால், ஆரஞ்சு பழச்சாறு, முட்டைக்கரு மற்றும் தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. தயிர் பெருமளவு சோரியாசிஸை கட்டுப்படுத்த தேவையான சத்துக்களை உடலுக்கு அளிப்பதால் அதை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தொகுப்பு: க.கதிரவன்

Related Stories: