சில்லி சிக்கன் மசாலா

செய்முறை : சிக்கனை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பல்லாரி, தக்காளியை கழுவி நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை நன்றாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கிராம்பு, பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளித்து, நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும். அதனுடன் அரைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்நன்கு வதங்கியவுடன் மசாலா தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் சிக்கன், உப்பு சேர்த்து நன்கு கிளறி 3 டம்ளர் தண்ணீர் விட்டு மிதமான தீயில் நன்கு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்து மிருதுவானவுடன் மல்லித்தழையை தூவி இறக்கவும்.டிபன், சாத வகைகளுக்கு ஏற்ற சிக்கன் சில்லி மசாலா ரெடி.

Advertising
Advertising