Ulektz என்றால் என்ன?

பாடம் படிச்சா மட்டும் போதுமா?

படித்தப் படிப்புக்கு எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது? லட்சங்கள் செலவு செய்து பொறியியல் படித்த இளைஞர்களே இப்போது உணவு டெலிவரி செய்ய டூவீலர்களில் நகரம் முழுக்க அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.‘‘படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்பதற்கு முக்கிய காரணம் நாம் நம்முடைய அடிப்படை மற்றும் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை’’ என்கிறார் சாதிக். ‘‘என்னதான் புத்தகத்தை படிச்சு தேர்வில் சேர்ச்சி பெற்றாலும், அது மட்டுமே நமக்கான வேலையை ஈட்டிக் கொடுக்காது. இப்போது நிறைந்து இருக்கும் போட்டி நிறைந்த உலகில் நமக்கான சிறப்புத் திறன்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பாடபுத்தகங்கள் மட்டும் இல்லை அது சார்ந்த வேறு புத்தகங்களையும் படிக்க வேண்டும். மேலும் எந்த நிறுவனத்தில் எந்த தகுதிக்கான வேலை வாய்ப்புள்ளது என்பதை நாம் விரல் நுனியில் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்’’ என்கிறார் சாதிக்.

இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். கம்ப்யூட்டர் துறையில் பொறியியல் படித்தார். பிறகு எம்.பி.ஏ மற்றும் எம்.பில் முடித்தார். பன்னிரெண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றினார். அப்போது இந்தியாவில் கல்வி குறித்து பிராஜக்ட் ஒன்றை எடுத்துச் செய்தார். அப்போது தான் அவருக்கு ஒன்று புரிந்தது. இந்தியாவில் உள்ள பல மாணவர்களுக்கு படிப்பு சார்ந்த அறிவு இருந்தும், அதை திறம்படச் செயல்படுத்தத் தெரிவதில்லை. அதாவது applied skills இல்லை என்பதை புரிந்துக் கொண்டார். இதை எப்படி மாணவர்களுக்கு கொண்டுச் செல்லலாம் என்று அவர் யோசித்த போதுதான் Ulektz இணையத்தளம் உருவானது.

Ulektz என்றால் என்ன?

Ulektz என்ற இணையத்தளம் மூலம் இந்தியாவில் கிடைக்கக்கூடிய பல்வேறு தரப்பட்ட புத்தகங்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து தெரிந்துக் கொள்ள முடியும். தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எதிர்ப்பார்க்கும் திறமை, நம் மாணவர்களிடம் இல்லை. லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை அறிந்து தன்னை அப்கிரேட் செய்துக் கொள்ளும் மாணவர்கள் மட்டுமே தங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமைவதில்லை. அது போன்றவர்களை இந்த இணையத்தளம் ஒரே குடையின் கீழ் இணைக்கிறது. இதன் மூலம் பலத்தரப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களை நாம் இணைக்க முடியும். இன்றைய இளைஞர்களுக்கு பேஸ்புக், வாட்ஸ்சப், இன்ஸ்டாகிராம் மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் தாண்டி பல விஷயங்கள் இதில் உள்ளன.

எப்படி செயல்படுகிறது?

Ulektz-ஐ தனிப்பட்ட நபர்களும் பயன்படுத்தலாம். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களும் பயன்படுத்தலாம். கல்லூரி, பல்கலைக்கழகங்கள் அல்லது நிறுவனங்கள் பயன்படுத்தும் போது, அவை சார்ந்த அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் இணைக்கப்பட்டு இருப்பார்கள். அதே சமயம் ஒரு தனிப்பட்ட நபர் இணையும் போது அவர்களும் இதில் ஏற்கனவே இணைக்கப்பட்டு இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். Ulektz-யை அந்தந்த கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்ப தனியாகவும் customise செய்துத் தருகிறார்கள். பிளாட்பார்ம் ஒன்று தான் என்றாலும், அதன் கிளைகள் தான் பரந்து விரிந்து இருக்கும். மேலும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் ஆட்கள் தேவை என்றால் இதில் குறிப்பிடலாம். அது மட்டும் இல்லை தனித்திறமை சார்ந்த பயிற்சிகள், அது குறித்த வீடியோக்களும் இதில் ஏராளமாக உள்ளன. ஆன்லைன் முறையில் நாம் விரும்பும் பயிற்சிகளை எடுத்து படிக்கலாம். அது பற்றிய விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம். இதில் ஈ புத்தக வசதியும் உள்ளது. நாம் விரும்பும் படிப்புச் சார்ந்த பத்தகங்களை, அவரவர் அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளலாம். பாடம் குறித்த சந்தேகங்கள் இருந்தாலும், துறை சார்ந்த ஆசிரியர்களிடம் இணையம் மூலம் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

இணைவது எப்படி?

இதில் இணைய முதலில் Ulektz.com என்ற இணையத்திற்குள் செல்ல வேண்டும். அங்கு முதலில் உங்களை பற்றிய விவரங்கள் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு இப்போது நீங்கள் குறிப்பிட்டத் துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர் என்றால், உங்களின் பிரிவு என்ன என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களை நீங்கள் அது சார்ந்த வகுப்பறைக்குள் இணைத்துக் கொள்ளலாம்.படித்த படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்பு குறித்த தகவல்களும் இங்கு அப்டேட் செய்யப்படுகின்றன. அனைத்து துறை சார்ந்த வேலைகள் மற்றும் அதற்கான தகுதிகள் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்கள் தகுதிக்கேற்ற வேலையினை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். உங்களின் தனித்திறமை மட்டும் இல்லாமல் தகுதிக்கேற்ற வேலையினை Ulektz மூலம் தேர்வு செய்யலாம். இதை இணையத்தில் மட்டுமில்லை, கைபேசியில் app

ஆகவும் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.

-ஷம்ரிதி

Related Stories: