எறும்புக்கு இரண்டு வயிறு!

சுறுசுறுப்புக்கும், உழைப்புக்கும் உதாரணமாக சொல்வதென்றால் எறும்புகளை சொல்வார்கள். எறும்புகள் பொதுவாக வெப்பமான சூழல் உள்ள பகுதிகளிலேயே கூட்டம் கூட்டமாக வாழும். உலகில் சுமார் 10,000 வகையான எறும்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இவை பொதுவாக 45 முதல் 60 நாட்கள் வரை உயிர் வாழும். எறும்பின் கால்கள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும். மிக வேகமாக ஓடும் திறனுடையது. அதாவது, உருவத்துடன் ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இணையாக ஓடும் ஆற்றலுடையது. இவை பொதுவாக ஆறு நிறங்களில் (Green, Red, Brown, Yellow, Blue or Purple) காணப்படும்.

தனது எடையை போன்று 20 மடங்கு அதிகமான சுமையை தூக்கிச் செல்லும் திறனுடையது. எறும்புகளால் திட உணவுகளை உண்ண இயலாது. அதில் இருந்து juice -ஆக பிரித்து எடுத்துதான் உண்ணும். எறும்புகளின் தலையில் காணப்படும் நீட்சிகளின் மூலமாகத்தான் தொடு உணர்வு மற்றும் வாசனையை உணரும். எறும்புகள் சராசரியாக 2 முதல் 7 mm வரை வளரும். ஆனால், carpenter எறும்புகள் சுமார் 1 inch வரை வளரும். எறும்புகளுக்கு இரண்டு வயிறுகள் காணப்படும், ஒரு வயிற்றில் தனக்கு தேவையான உணவுகளையும், மற்றொரு வயிற்றில் பிற எறும்புகளுக்காகவும் உணவை எடுத்துச் செல்லும்.

Related Stories: