சீன எல்லையில் காணாமல் போன விமானம் மனைவி கண்முன் நடந்த பரிதாபம்: உருக்கமான தகவல் வெளியானது

புதுடெல்லி: கணவன் ஓட்டிச்சென்ற விமானப்படை விமானம் மனைவி கண்முன்னே மாயமான திடுக் தகவல் வெளியாகியுள்ளது. 4 நாட்களாக தேடியும் விமானத்தில் சென்ற 13 பேர் கதி தெரியவில்லை. அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 3ம் தேதி விமானப்படை விமானம் ஏஎன் 32 அருணாச்சலப் பிரதேசத்தின் மென்சுகா பகுதிக்கு புறப்பட்டு சென்றது.

பிற்பகல் 12.27க்கு மேல் எழும்பிய அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது சரியாக 1 மணிக்கு கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அந்த விமானத்தை அரியானாவின் பல்வாலை சேர்ந்த ஆசிஷ் தன்வார் என்ற பைலட் இயக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் மேலும் 12 பேர் பயணம் செய்தனர்.

இதனால் அந்த விமானம் விபத்தில் சிக்கியதாக கருதி தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது அதை ஜோர்கத்தில் உள்ள விமானப்படை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வரும் ஆசிஷின் இளம்மனைவி சந்தியா ரேடாரில் கண்காணித்தபடி இருந்தார்.

இதனால் விமானம் மாயமானது முதலில் மனைவி சந்தியாவுக்குதான் தெரியவந்தது இப்போது தெரியவந்துள்ளது. சந்தியாவுக்கும் பைலட் ஆசிஷ் தன்வாருக்கும் கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்தது. எப்போதும் நமக்குள் பிரிவு ஏற்படக்கூடாது என்று விரும்பிய அவர்களிடையே இந்த விமான விபத்து பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானத்தை தேடும் பணி 4வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

Related Stories: