கோபன்ஹேகனில்: டென்மார்க்கின் முதல் இளம் பெண் பிரதமராக மெட்டி பிரெடரிக்சென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கில் 179 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பொது தேர்தல் நேற்று (05-06-2019) நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்த நிலையில், தொடக்கம் முதலே சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடதுசாரிக் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் சமூக ஜனநாயக கட்சி மற்றும் இடதுசாரிக் கூட்டணி மொத்தமுள்ள 179 சீட்களில், 91 சீட்களை கைப்பற்றி 25.9% வாக்குகள் பெற்றது. இதனையடுத்து இந்த கூட்டணி வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றிப்பெற்றுள்ள நிலையில், சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெட் பிரெடிரிக்சன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 41 வயதான மெட் பிரெடிரிக்சன் ,முதல் இளம் பிரமதர் என்பது குறிப்பிடத்தக்கது.