டிவிஎஸ் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...?

நாட்டின் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ், அதன் கிரையான் ரகத்திலான முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டிவிஎஸ் நிறுவனம், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன காட்சியில் கிரையான் என்னும் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டரை அந்த நிறுவனம், எதிர்கால டிசைனிற்கு ஏற்ப உருவாக்கியிருந்தது. அந்த வகையில், இதில் பெரிய அளவிலான எல்இடி மின்விளக்கு அதன் முகப்பு பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்தது. அத்துடன், இதன் லுக் மிகவும் ரம்மியமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆகையால், டிவிஎஸ் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரையே முதலில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிவிஎஸ் நிறுவனம், கிரையான் ரகத்திலான வேறொரு மாடலைத்தான் தற்போது முதலில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பல்வேறு பாகங்களை, அந்த நிறுவனத்தின் என்டார்க் ஸ்கூட்டரிடம் இருந்தே பெற உள்ளது. அந்தவகையில், அந்த ஸ்கூட்டரின் வீல், சஸ்பென்ஷன் அமைப்பு உள்ளிட்டவற்றை பகிர இருக்கிறது. இந்த நடவடிக்கையால், எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சக்தி வாய்ந்த பேட்டரி பேக்குகள் பொருத்தப்பட உள்ளன. இது, ஸ்கூட்டருக்கு அதிக பயணிக்கும் ரேஞ்சை வழங்கும். அந்த வகையில், 12kW திறன் கொண்ட மூன்று லித்தியம் அயன் பேட்டரிகள் வழங்கப்பட்டுள்ளன. இவை, வெறும் 60 நிமிடங்களிலேயே 0-ல் இருந்து 80 சதவீதம் சார்ஜை அடைந்துவிடும் திறன்கொண்டவை. மேலும், இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம்.

என்டார்க் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்களே இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட உள்ளன. இத்துடன், நேவிகேஷன், கடைசியாக பார்க்கிங் செய்யப்பட்ட இருப்பிடம் உள்ளிட்டவற்றை வழங்கும் சிறப்பு வசதியும் இதில் இணைக்கப்பட உள்ளன. பல்வேறு பிரத்யேகமான மற்றும் சிறப்பு வசதிகளை பெற்றுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டிலேயே அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: