சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 2 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசார் கைது

சென்னை: சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்தவர்கள் தாங்கள் போலீசார் என்று கூறி தப்ப முயன்றனர். அவர்களை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். போலீஸ் விசாரணையில் சூதாட்டத்தில் 2 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 போலீசார் ஈடுபட்டது தெரிய வந்தது.

சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சிவசங்கர், தலைமை காவலர்கள் ஏழுமலை, சந்திரசேகர், காவலர் அஸ்மத் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் 5 பேரும் அதே பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி, விடுதி பணியாளர் ரகுமான், ஜானகிராமன் ஆகியோருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: