பிளஸ்2 விடைத்தாள் நகல் இன்று முதல் வினியோகம்

சென்னை: பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 19ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தொடர்ந்து, விடைத்தாள் நகல்கள் பெற விண்ணப்பித்த மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வு எழுதி நிலுவையில் உள்ள பாடங்கள் (Arrear) தேர்வு எழுதி  விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் தங்கள் விடைத்தாள் நகல்களை இணைய தளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். scan.tndge.in என்ற இணைய தளத்தில் அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடத்தின் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-2 அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதை பூர்த்தி செய்து இரண்டு  நகல்கள்  எடுத்து இன்று காலை 10 மணி முதல் 10ம் தேதி வரை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை  முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில்  பணமாக செலுத்த வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒவ்வொன்றுக்கும் ரூ.505, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடம் மட்டும் ரூ.305, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: