மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்டவர் சுமலதா அளித்த விருந்தில் பங்கேற்ற காங். தலைவர்கள்

பெங்களூரு: கர்நாடகாவில் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அளித்த விருந்தில் காங்கிரசின் 2ம் கட்ட தலைவர்கள் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியானதால் முதல்வர் குமாரசாமி கோபத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளார். கர்நாடகாவில் உள்ள மண்டியா மக்களவை தொகுதியில் மஜத-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில்கவுடா போட்டியிட்டுள்ளார். காங்கிரஸ் டிக்கெட் தர மறுத்ததால் முன்னாள்  அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக இங்கு களமிறங்கினார். இவருக்கு பாஜ ஆதரவு அளித்தது. இந்நிலையில்,மஜத வேட்பாளர் குமாரசாமிக்கு பணியாற்ற விரும்பாத காங்கிரஸ் நிர்வாகிகள் பகிரங்கமாக சுமலதாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆத்திரமடைந்த  குமாரசாமி,  மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா ஆகியோரிடம் புகார் கூறினார்.

இந்நிலையில், தேர்தல் முடிந்த பிறகு, தனியார் ஓட்டல் ஒன்றில் சுமலதா விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இதில், காங்கிரஸ் 2ம் கட்ட தலைவர்களான முன்னாள் அமைச்சர் செலுவராயசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த புகைப்படம் நாளிதழ்களில் வெளியானது. இதனால், கோபத்தின் உச்சத்துக்கு சென்ற முதல்வர் குமாரசாமி, கூட்டணி தர்மத்தை மீறி நடந்து கொண்ட காங்கிரசார் மீது கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று மாநில தலைவர் தினேஷ் குண்டுராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோபமாக கேட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: