ஓட்டு போட்டால் ஓட்டலில் டிஸ்கவுண்ட்: தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: மக்களவைத் தேர்தலில் வாக்களிப்போருக்கு ஓட்டல் பில்களில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடக்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலோடு 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 100 சதவிகிதம் வாக்களிக்க மக்களுக்குத் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.  இந்நிலையில் தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கமும் தன் பங்கிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது, வரும் 18ஆம் தேதி தேர்தலில் வாக்களிப்பவர்கள் ஓட்டல் பில்களில் 10 சதவிகிதம் தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியை மக்கள் தங்கள் கை விரலில் உள்ள மை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைக் காண்பித்துப் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி சலுகை சரவணபவன், சங்கீதா, ஹாட் சிப்ஸ், வசந்த பவன் உள்ளிட்ட முன்னணி ஓட்டல்களிலும் செல்லும். மேலும் இந்தத் தள்ளுபடி சலுகையை வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் மாலை 6 மணிக்குப் பிறகு பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் ஓட்டல்களும், சென்னையில் 1000 ஓட்டல்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: