ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக திவால் நடவடிக்கை எடுத்தால் எரிக்சன் நிறுவனம் ரூ.550 கோடியை திரும்ப வழங்க தீர்ப்பாயம் எச்சரிக்கை

மும்பை : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு எதிராக திவால் நடவடிக்கை எடுப்பது குறித்து மறு ஆய்வு செய்தால் எரிக்சன் நிறுவனம் ரூ.550 கோடியை திரும்ப வழங்க வேண்டும் என்று தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

திவால் நடவடிக்கையை ஏற்க முடிவு செய்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்

அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், 46 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிறுவனம் மீது முதன் முதலாக, ஸ்வீடனைச் சேர்ந்த, ‘எரிக்சன்’ நிறுவனம், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில், திவால் நடவடிக்கைக்காக விண்ணப்பித்தது.இதையடுத்து, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சொத்து விற்பனை மூலம், 40 நிறுவனங்களுக்கு, 25ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப அளிப்பதாக கூறி, அவகாசம் கேட்டது. இதை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஏற்று, திவால் நடவடிக்கையை நிறுத்தி வைத்தது. ஆனால், எதிர்பார்த்தபடி, சொத்துக்களை விற்பனை செய்ய முடியவில்லை. ஆதலால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், திவால் நடவடிக்கையை ஏற்க முடிவு செய்தது.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தான் முன்னுரிமை

இதனிடையே எரிக்சன் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 550 கோடியை   உச்சநீதிமன்றம் உத்தரவின்படி வட்டியுடன் சேர்த்து ரூ. 576 கோடியாக அனில் அம்பானி நிறுவனம் அளித்தது.

இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு எதிராக திவால் நடவடிக்கையை தொடங்கினால் எரிக்சன் நிறுவனம் ரூ.576 கோடியை அனில் அம்பானி நிறுவனத்திற்கு திரும்ப வழங்க வேண்டும் என்று தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்தது. திவால் நடவடிக்கையின் படி அனில் அம்பானி நிறுவனத்தின் சொத்துக்களை விற்று வரும் பணத்தை பெற கடன் வழங்கிய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் எரிக்சன் நிறுவனத்திற்கு கடைசி வாய்ப்பு தான் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: