நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மாபெரும் கல்வி கண்காட்சி: இன்றும், நாளையும் நடக்கிறது

தினகரன் நாளிதழ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.  பிளஸ் 2 முடித்ததும், அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற கேள்விதான் முதலில் எழும். அதுவும் பெற்றோர் படும் பாடு சொல்லி மாளாது. இன்ஜினியரிங் படிப்பதா, மருத்துவம் படிப்பதா, மார்க் குறைவாக இருந்தால் வேறு ஏதாவது டெக்னிகல் கோர்ஸ் போதுமா, கல்லூரி பட்டப்படிப்புக்கு போவதென்றால் எந்த துறையை தேர்வு செய்வது என்று ஆயிரம் கேள்விகள் தலையை சுற்ற வைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் ஆயிற்றே... அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது பெற்றோரின் கடமை அல்லவா.  நல்ல கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்றால், சிலருக்கு லட்சங்கள் தேவைப்படும். பட்ஜெட் இடிக்கும். மாணவர்களை பொறுத்தவரை நண்பர்கள் சொல்வதைத்தான் கேட்டு முடிவு செய்வார்கள். இவ்வளவு காலம் பள்ளியில் உடன் படித்த தோழன் எந்த கல்லூரியில் எந்த துறையை தேர்வு செய்கிறானோ அதிலேதான் நானும் சேர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இந்த சமயத்தில் அவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல் அவசியம்.

Advertising
Advertising

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில வழிகாட்டும் வகையிலும், பல்வேறு படிப்புகள் தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் வகையிலும் தினகரன் கல்வி கண்காட்சியில் கல்வியாளர்கள் விளக்கம் தர உள்ளனர்.  அடுத்ததாக என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? நுழைவு தேர்வுகளின் விவரங்கள், வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் புதிய துறைகள் என்னென்ன, கடல்சார் பொறியியல், விமான கலை படிப்புகள், இன்ஜினியரிங் ஆகியவற்றில் எது பெஸ்ட்? ஸ்காலர்ஷிப் A முதல் Z வரை, உடனடி வேலைக்கு என்ன படிக்கலாம், மருத்துவ படிப்புகள், வெளிநாட்டு கல்விக்கு வாய்ப்பு உண்டா, பிசினஸ் கல்வி, கணினி அறிவியல், மின்னணுவியல், தகவல் தொடர்பு படிப்புகள், கல்விக் கடன் கிடைக்குமா? என்பன உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைய உள்ளது.  இதுதொடர்பான மேலும் தகவல்களுக்கு: தீபா, 72990 30525 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.

இலவச பஸ் வசதி  கண்காட்சி நடைபெறும் சென்னை வர்த்தக மையத்திற்கு செல்ல மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

பஸ் புறப்படும் இடங்கள்:

* கோஜான் கல்வியியல் கல்லூரி, (பாடி, செங்குன்றம்)

* சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (போரூர், கிண்டி)

* எஸ்.ஏ இன்ஜினியரிங் கல்லூரி (கரையான்சாவடி)

* தனலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரி, (தாம்பரம் சைதாப்பேட்டை, அடையார் டெப்போ)

* டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம்  (கோயம்பேடு, மதுரவாயல்)

* ஸ்ரீராமானுஜர் இன்ஜினியரிங் கல்லூரி,  (தாம்பரம், பல்லாவரம்)

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: