மாதவராவ் சிந்தியாவின் மருமகளுக்கு சீட் கேட்கும் குவாலியர் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், மத்தியப் பிரதேச மாநிலம் குணா மக்களவைத் தொகுதி எம்.பியுமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மனைவி பிரியதர்சினி ராஜே சிந்தியாவை குவாலியர் மக்களவை தொகுதியில்  வேட்பாளராக்க வேண்டும் என அம்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.குவாலியர் தொகுதி, சிந்தியா மன்னர் குடும்பத்தினரின் கைவசமே அதிகம் இருந்துள்ளது. ஜோதிராதித்யா சிந்தியாவின் தந்தையும் மறைந்த காங்கிரஸ் தலைவருமான மாதவராவ் சிந்தியா 6 முறை இந்த தொகுதியில் எம்.பியாக  இருந்துள்ளார். அதேபோல் ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி விஜயராஜே சிந்தியாவும், அத்தை யசோதா ராஜே சிந்தியாவும் பாஜ சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளனர்.

இந்த தொகுதியில் பிரியதர்சினி ராஜே சிந்தியாவை வேட்பாளராக்க வேண்டும் என குவாலியர் மாவட்ட காங்கிரசார் கங்கணம் கட்டி வேலை செய்து வருகின்றனர். இதற்காக அம்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளனர். 1999க்கு பிறகு 2004 தேர்தலில் மட்டுமே தொகுதியை காங்கிரசால் வெல்ல முடிந்தது. சிந்தியாவை வேட்பாளராக்கினால் தொகுதியை கைப்பற்றலாம் என அம்மாவட்ட காங்கிரசார் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: