உலகம் பலவிதம்

பூத்துக்குலுங்கும் பாப்பி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லேக் எல்சினோர் மலைப்பிரதேசத்தில் ஆரஞ்சு நிற பாப்பி மலர் சீசன் தொடங்கி உள்ளது. மலை முழுவதும்  ஆரஞ்சு வண்ணம் போர்த்தியது போல பூத்துக்குலுங்கும் பாப்பியின் அழகை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் குவிகின்றனர். பூக்களுக்கு  மத்தியில் மாடல் அழகி ஒருவர் புகைப்படங்களுக்கு போஸ் தருகிறார்.
Advertising
Advertising

ரஷ்யாவில் வாத்து சண்டை

ரஷ்யாவில் வாத்து சண்டை கடந்த 400 ஆண்டாக பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் மாஸ்கோ அடுத்த காளிகினோ கிராமத்தில் நடந்த  வாத்து சண்டையை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்க்கின்றனர். நம்மூர் சேவலுக்கு நிகராக, வாத்துகளும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்கின்றன.

கில்லர் ரோபோட்டை நிறுத்து

நவீன ஆயுதங்களின் கண்டுபிடிப்பு நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, மனிதர்கள் உதவி இல்லாமல், முழுக்க  முழுக்க ரோபோக்களே ஆயுதங்களை பயன்படுத்தும் கண்டுபிடிப்புகள் உலகில் நடந்து வருகின்றன. மனித அழிவுக்கு வழி வகுக்கும் இத்தகைய கில்லர்  ரோபோ கண்டுபிடிப்புகளை நிறுத்த வலியுறுத்தி, ஜெர்மனியின் பெர்லினில் ‘ஸ்டாப் கில்லர் ரோபோட்’ அமைப்பினர் அமைதி போராட்டம் நடத்தினர்.

பச்சை நிறமான ஆறு

அமெரிக்காவின் சிகாகோவில் செயின்ட் பேட்ரிக் தினத்தையொட்டி, அனைத்து இடங்களும் பச்சை நிறமாக காட்சிப்படுத்துவது வழக்கம். இந்த ஆண்டு,  சிகாகோ ஆற்றில் பச்சை நிற சாயத்தை டன் கணக்கில் ஊற்றி, ஆற்றையே பச்சை நிறமாக ஜொலிக்க வைத்துள்ளனர்.

சம பகல்-இரவு நாள்

ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய வானியல் நிகழ்வுகளில் சம பகல் இரவு நாளும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மார்ச் 20ம் தேதி சம பகல் இரவு  நாள் வந்தது. இதை கொண்டாடும் வகையில், லிதுவேனியா நாட்டின் வில்னியஸ் நகரில் மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி இரவை பகலாக்கினார். சம பகல்  இரவு நாள் கொண்டாடும் வழக்கம் 1992ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: