கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் : எஸ்பி வேலுமணி உறுதி

கோவை : கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்றும் இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி உறுதி அளித்தார். கோவையில் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்குதல், கோழி வளர்ப்பு திட்டம், நாட்டுக் கோழி குஞ்சுகள் வளர்ப்பு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி , விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடுத் தொகையை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள் வளர்ச்சி பெறும் என்றும் இதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் உறுதி அளித்தார். மேலும் கோவை விமான நிலைய விரிவாக்கம் நடைபெறுவது பல வழிகளில் முன்னேற்றத்தை தரும் என்று வேலுமணி குறிப்பிட்டார். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தும் நிலத்தின் வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக வேலுமணி தெரிவித்தார். நில உரிமையாளர்கள் 13 பேருக்கு ரூ.1.60 கோடி இழப்பீட்டு தொகை வழங்கிய பின் அமைச்சர் வேலுமணி மேற்கண்டவாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: