கொடைக்கானலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் போராட்டம்!

திண்டுக்கல் : கொடைக்கானலில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை என்பது வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களிலிருந்து கிடைக்கும் தேவையில்லாத பயன்படுத்தப்பட்ட திடப் பொருள்களை சரியான முறையில் நிர்வகிக்கும் செயலாகும். கொடைக்கானலில் நகராட்சி அதிகாரிகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்தால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டதிற்கு எதிர்ப்பு நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் இப்பிரச்னை குறித்து உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து இன்று பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பாடாததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: