ஜம்முவில் ஊரடங்கு தளர்வு

ஜம்மு: புல்வாமா தாக்குதலை அடுத்து ஜம்முவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை அதிகாரிகள் நேற்று 3 மணி நேரம் தளர்த்தினார்கள். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஜம்முவில் போராட்டங்களும், கலவரங்களும் வெடித்தன. இதனால், சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்காக ஜம்முவில் கடந்த வெள்ளிக்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், நேற்று காலை 8 மணி முதல் 11 மணி வரை 3 மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. பின்னர் 3 மணி வரை இது நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி உள்ளிட்டவை இன்றி சிரமமடைந்த பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். எனினும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை 6வது நாளாக நேற்றும் மூடப்பட்டு தான் இருந்தது. ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவினால் சாலைகளில் பாறைகளும், மணலும் குவிந்துள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: