புதிய ரெனோ டஸ்டர் அறிமுகம்

காம்பேக்ட் ரக எஸ்யூவி கார் மார்க்கெட்டில் ரெனோ டஸ்டர் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக வலம் வருகிறது. பல புதிய மாடல்களின் வருகையால், மார்க்கெட்டை நிலைநிறுத்த, இந்த காரில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் விதத்தில் இந்த கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் RxE, RxS மற்றும் RxZ ஆகிய வேரியண்ட்டுகளில் 7 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் கிடைக்கும். எனினும், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி நீக்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனிலேயே இந்த வசதி இருப்பதால் நீக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது. அதேபோன்று, அனைத்து வேரியண்ட்டுகளிலும் இபிடி-யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது. இது நிச்சயம் மதிப்பு கூட்டும் விஷயமாக இருப்பதுடன், புதிய பாதுகாப்பு நடைமுறைக்கு ஒப்பானதாக இருக்கும். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த RxL பெட்ரோல் சிவிடி கியர்பாக்ஸ் வேரியண்ட்டிற்கு பதிலாக புதிய ரெனோ டஸ்ட்டர் காரில் RxS என்ற புதிய மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, 84 பிஎச்பி பவரை அளிக்கவல்ல டீசல் இன்ஜின் மாடலில் இருந்து பேஸ் வேரியண்ட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

Advertising
Advertising

இப்புதிய கார், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் இரண்டுவிதமான பவரை வெளிப்படுத்தும் திறன்கொண்ட 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் இன்ஜின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் இன்ஜின் 84 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மாடலிலும், 108 பிஎச்பி பவரையும், 248 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மற்றொரு மாடலிலும் கிடைக்கும். 84 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷனும், 108 பிஎச்பி பவரை அளிக்கும் மாடலானது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும். இப்புதிய ரெனோ டஸ்டர் கார் 7.99 லட்சத்தில் இருந்து 13.10 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: