கலக்க வரும் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி

மக்களின் தேவையை அறிந்து அதற்கேற்ப வாகனங்களை தயாரிப்பதில் இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் செயல்பட்டு வருகிறது. பஜாஜ் தயாரித்த அனைத்து வாகனங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளன. இதில், மிகப்பெரிய ஹிட் அடித்த பைக் பல்சர். இது, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல். பஜாஜ் தனது வியாபாரத்தை அதிகரிக்கும் விதமாக சர்வதேச பைக் தயாரிப்பு நிறுவனம் டிரையம்ப் உடன் இணைந்துள்ளது. இந்நிறுவனங்கள் இணைந்து, மிட்-கேபாசிட்டி மோட்டார் சைக்கிளை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இந்த இரு நிறுவனங்களும் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை செய்ய உள்ளன. போட்டித்தன்மை, தரம், விநியோகம், பிராண்ட் நிலை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றின் பங்களிப்புகளுடன் இந்நிறுவனங்கள் கூட்டாக செயல்பட உள்ளன.

இந்தியாவில், பஜாஜ் சாகான் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிளுக்கு, டிரையம்ப் நிறுவனம் பொறியியல் பணிகளை மேற்கொள்ள உள்ளது. மேலும், இந்த பைக்கில் 500 சிசி இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. பஜாஜ் விற்பனையை உள்நாட்டில் அதிகரிக்கவும், அதன் போட்டியாளர்களுக்கு கடுமையான சவாலை கொடுக்கவும் அதிநவீன மாடலாக இந்த பைக் வெளிவர உள்ளது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே வளர்ந்த நாடுகளில் உள்ள டிரையம்ப் நிறுவனத்தின் R&D நிபுணத்துவத்தை பயன்படுத்தி பஜாஜ் வாகனங்களை வெளிநாடுகளில் புரமோட் செய்யவும் இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பைக் ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் பஜாஜ் நிறுவனத்தை உருவாக்க டிரையம்ப் திட்டமிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: