மாருதி சுஸுகி

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் நிறுவனம், வருகிற 2020-ம் ஆண்டிற்குள் தனது பேட்டரி காரை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.  இதைத்தொடர்ந்து, வேகன்ஆர் மாடல் காரில், முதல் பேட்டரி காரை தயாரித்து சோதனை ஓட்டமாக பரிசோதித்து வருகிறது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 72  வோல்ட் உள்ள 10-25 kWh லித்தியம்-அயன் பேட்டரி இந்த கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் சோதனை ஓட்டம் முடிவடைந்த பின்னர் மாருதியின், முதல் பேட்டரி கார்  சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும்.

நிஸான் லீப்

சமீப காலமாக கார் விற்பனையில் சக்கைப்போடு போடும் நிஸான் நிறுவனம், கிக்ஸ் என்னும் இரண்டாம் தலைமுறை லீப் பேட்டரி காரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிறுவனத்தின்  பேட்டரி ரக கார்கள், உலக நாடுகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. மேலும், இந்நிறுவனத்தின் பேட்டரி கார்களே தற்போதுவரை அதிகம் விற்பனையாகும் கார்களில் முதல் இடத்தில் உள்ளது.  இந்த ஆண்டு இறுதிக்குள் இந்நிறுவனம் தனது பேட்டரி கார்களை இந்தியாவிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, மணிக்கு 100 கிமீ வேகத்தில் செல்லும், 150  குதிரைத்திறன் உடைய கார்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கார், 168 முதல் 258 கிமீ வரை மைலேஜ் தரக்கூடிய வகையில் இருக்கும் என நிஸான் அறிவித்துள்ளது.

ஆடி ஈ-டிரான்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆடி ஈ-டிரான் பேட்டரி கார் இந்த வருடத்திலேயே சந்தையில் களமிறங்க உள்ளது. போட்டி கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடுமையான சவாலை கொடுக்கும்  வகையில் இந்த மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி ரக மாடலில் வெளியாக இருக்கும் இந்த கார் 125kW ரேர் மோட்டார் மற்றும் 140 kW ஆகிய மோட்டார்களுடன் இயங்க உள்ளது.  இதனால், 561 என்எம் டார்க் திறனுடன் 300 முதல் 408 குதிரை திறனை வெளிப்படுத்த உள்ளது. மேலும், இதன் சிங்கிள் சார்ஜ் மூலம் 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் அதிநவீன  மோட்டார்கள் 6.6 செகண்ட்ஸில் 100 கிமீ வேகத்தை தொடும் அளவுக்கு சக்தி வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா டியாகோ

உள்நாட்டு தயாரிப்பான டாடா கார் நிறுவனம் டியாகோ என்னும் பேட்டரி கார் மாடலை சந்தையில் விற்பனை செய்ய உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில்  டியாகோ பேட்டரி காரை டாடா நிறுவனம் அறிமுகம் செய்தது. டாடா இண்டிகாவைப்போல் இருக்கும் அதன் தோற்றம் சிறியளவில் இருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த  காரில் 30kW மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

ரெனால்ட் கிவிட்

இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் ரெனால்ட் பேட்டரி ரக கார், ஏற்கனவே பாரிஸ் நகரில் நடைபெற்ற 2018ம் ஆண்டு கார் கண்காட்சியில் இடம்பெற்றுவிட்டது. சீனாவில் தயாரிக்கப்பட்டு  வரும் இந்த மாடல் கார், இந்த வருடத்திலேயே இந்தியாவிலும் அறிமுகமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகள் மற்ற பேட்டரி  கார்களைப்போலவே நவீன தொழில்நுட்பத்தை கொண்டவையாக இருக்கிறது.

மஹிந்திரா ஈ-கேயூவி 100

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா, தனது பேட்டரி காரான மஹிந்திரா ஈ-கேயூவி100 மாடலை கடந்த 2018ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது.  இந்த மாடலை இந்த ஆண்டு அரையிறுதிக்குள் விற்பனைக்கு கொண்டுவர இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரில், 72v லித்தியம் -அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.  மேலும், இந்த காரில் 30kW (40.79) திறனை வெளிப்படுத்தும் மோட்டார் நிறுவப்பட்டுள்ளது. இது, 100 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. இந்த மாடலை தொடர்ந்து, எக்ஸ்யூவி 300 பேட்டரி  காரையும் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது மஹிந்திரா. இந்த மாடல் காரானது, தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜினில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மஹிந்திரா நிறுவனம்  இந்த மாடல் பேட்டரி காரை வரும் 2020-ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய உள்ளது. அதிக மைலேஜ் கொடுக்கும் விதமாக இந்த காரில் இரு விதமான பேட்டரிகள் நிறுவப்படுகிறது.  இதன்காரணமாக, எக்ஸ்யூவி300 மாடல் 250 கி.மீ தூரம் வரை மைலேஜ் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா டிகோர்

டாட்டா நிறுவனத்தின் மற்றொரு பேட்டரி கார் தயாரிப்பான டாடா டிகோர் என்ற மாடலையும் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது டாடா நிறுவனம். இதன் அறிமுக தேதி தற்போதுவரை  அறிவிக்கப்படவில்லை. ஆனால், இது அடுத்த வருடத்தின் இறுதிக்குள் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் எலக்ட்ரா ஈவி என்னும் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது,  30kW (40.79) திறனை வெளிப்படுத்தும். இந்த காரை சாதாரண ஏசி பிளக் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது ஆறு மணி நேரத்திலும், டிசி அதிவேக சார்ஜர் போர்டில் வைத்து சார்ஜ்  செய்யும்போது ஒன்றரை மணி நேரத்திலும் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். அவ்வாறு முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட இந்த காரில், 130 கி.மீ வரை பயணிக்க முடியும்.

எம்ஜி எலக்ட்ரிக்

எம்ஜி கார் தயாரிப்பு நிறுவனம் தனது எஸ்யூவி ரக, முதல் பேட்டரி காரை இந்தியாவில் 2020-ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது அறிமுகமாக இருக்கும் புதிய பேட்டரி  காரின் முழுமையான தகவல் அறியப்படாத நிலையில், அந்த நிறுவனத்தின் ஈ இஸட்எஸ் அல்லது ஈஆர்எக்ஸ்எஸ்5 மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் கோனா

கொரியன் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தனது, கோனா என்னும் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை இந்தியாவில் முதன் முறையாக சமீபத்தில் அறிமுகம் செய்தது. கோனா எலக்ட்ரிக்  காரை ஒருமுறை முழுமையாக ரீசார்ஜ் செய்தால் 350 கிமீ வரை பயணிக்க முடியும். இந்த காரை 100kw திறனுடைய டிசி குயிக் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யும்போது ஒரு மணி நேரத்திலும்,  சாதாரண ஏசி பாயிண்டில் சார்ஜ் செய்யும்போது குறைந்தது 6 மணி நேரத்திலும் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இந்த கார், இந்தியாவுக்கு புதிது என்றாலும், இந்த மாடல் கார், வெளிநாடுகளில்  பெட்ரோல், டீசல் ஆகிய இரு மாடல்களில் கிடைக்கின்றன. ஆனால், இந்தியாவில் எலக்ட்ரிக் மாடல்தான் முதலில் அறிமுகம் ஆக உள்ளது. இது, ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பில் இருப்பதால்,  பேட்டரி ஆற்றல் விரயமாவது தடுத்து லாங் டியூரேஷன் பேட்டரி லைப் கொடுக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மிக சக்தி வாய்ந்த மின்மோட்டார் 131 பிஎச்பி பவரையும், 395 டார்க்யூ  திறனையும் வெளிப்படுத்தும். மணிக்கு 167 கிமீ வேகம் வரை செல்லும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: