பல்லவன் சாலையில் வியாபாரம் செய்ய என்ஓசி தர உத்தரவிட முடியாது: சிறு வியாபாரிகள் வழக்கில் ஐகோர்ட் உறுதி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகர தேசிய சிறு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “ எங்கள்  சங்கத்தில் 120 உறுப்பினர்கள் உள்ளனர். அப்புறப்படுத்தப்பட்ட  எங்களுக்கு மாற்று இடமாக பல்லவன் சாலையில் கடைகளை அமைக்க தடையில்லா சான்று  வழங்குமாறு சென்னை போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனருக்கு (வடக்கு) உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி  சார்பில் ஆஜரான வக்கீல் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சி சிறு கடைகள் பகுதி குழுவை அணுகாமல் நேரடியாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மாநகராட்சி ஒரு குழுவை அமைத்துள்ள நிலையில் தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு இந்த நீதிமன்றம் எந்த அதிகாரிகளுக்கும் உத்தரவிட முடியாது.  மனுதாரர்கள் சம்மந்தப்பட்ட குழுவை அணுகி தங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: