மற்ற வாகனங்களை போல கப்பல் வேகமாக செல்ல முடிவதில்லை ஏன்?

கடல் வழி பயணங்கள்தான் உலகின் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கும், காலனித்துவ அடிமைத்தனத்திற்கும் வழி வகுத்துள்ளது. வரலாற்றின் ஆரம்பநிலை வெகுதூர பயணங்கள் பெரும்பாலும் கடல்வழியே நிகழ்ந்திருக்கிறது. மற்ற துறைகளை போலவே கப்பல்களிலும் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது ஏற்றுமதி, இறக்குமதி, பயணங்கள், போர் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கும் நவீன கப்பல்கள் உறுதுணையாக இருக்கின்றன. இருந்தாலும் பல ஆயிரம் டன் கப்பல்கள் மிதப்பது குறித்து இன்னமும் பலருக்கும் ஒரு ஆச்சரியம் இருந்து கொண்டே இருக்கிறது. கப்பல் ஆர்க்கிமிடீஸ் தத்துவத்திலே மிதக்கிறது.

Advertising
Advertising

அதாவது திடப்பொருளின் எடை, வெளியேறும் திரவப்பொருளின் எடைக்கு சமம் என்ற கணக்கீட்டிலே இந்த கப்பல்கள் இயங்குகின்றன. இதை மிதப்பு விசை என்கிறார்கள். இந்த விசை எப்போதும் மேல்நோக்கியே இருக்கும். கப்பல்கள் நீரில் செல்லும் போது குறிப்பிட்ட அளவு நீரை பக்கவாட்டில் தள்ளும். விலகிய அந்நீர் மீண்டும் பழைய இடத்திற்கு வந்து மேல்நோக்கி விசையுடன் செயல்படும். அதனால் கப்பல்கள் மிதக்கின்றன. தரைவழி பயணம் போல கப்பல்களால் அவ்வளவு வேகம் பயணிக்க முடியாது. காரணம், காற்றை விட அதிக அடர்த்தியான நீரில் கப்பல்கள் குறிப்பிட்ட அளவு மூழ்கிக் கொண்டே இருப்பதுதான். இந்த அடர்த்தியை மீறி பயணிக்க அதிக ஆற்றல் தேவைப்படும். எனவே குறைவான வேகத்திலே செல்கின்றன.

கப்பல்கள் குறிப்பிட்ட அளவு மூழ்கியபடி இருந்தால்தான் மிதக்கவும், சமநிலையிலும் இருக்கும். இதற்காக ஏராளமான அளவிற்கு தண்ணீர் உள்ளே சேகரிக்கப்பட்டிருக்கும். துறைமுகங்களில் ஆயிரக்கணக்கான டன் சரக்குகளை இறக்கும் போது எடை குறைந்து  நிர்ணயித்த அளவிற்கு மேல் எழுப்ப துவங்கும். இதனால் சமநிலை மாறி பக்கவாட்டில் அலைபாய நேரிடும். எனவே சரக்குகளை இறக்கியதின் மூலம் இழந்த எடைக்கு ஈடாக நீரை கப்பலில் நிரப்புவர். இதனால் கப்பல் இயல்பான நிலையில் நிற்கும்.மீண்டும் சரக்கு ஏற்றும் போதுஇந்நீரை வெளியேற்றுவர். துறைமுகங்களில் கப்பலின் பக்கவாட்டில் இருந்து நீர் அதிகளவு வெளியேறுவது இந்த காரணத்தினால்தான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: