‘மாசாணி தாயே பக்தி கோஷம் முழங்க’ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா

பொள்ளாச்சி : மாசாணி தாயே பக்தி கோஷம் முழங்க பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை துவங்கியது. இதற்காக நேற்று முன்தினம், சர்க்கார்பதியில் வெட்டப்பட்ட ஒரே மரத்தாலான ஆன சுமார் 85 அடி உயரத்தில் ஒரே நீளமுள்ள மூங்கில் வெட்டப்பட்டு, அதில் மஞ்சள் துணி சுற்றி, பக்தர்கள் மாசாணியம்மன் கோயில் அருகே செல்லும் உப்பாற்றங்கரைக்கு இரவில் கொண்டுவந்தனர்.

இன்று காலை, மாசாணியம்மன்கோயில் முன்பு கொடிகம்பம் நடும் நடந்தது. இதற்காக உப்பாற்றங்கரையில் மூங்கில் கொடிமரத்தை நீராட்டி, பின் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் கொடிமரத்தை சுமந்து வந்தனர். பின்னர் மாசாணியம்மன் 5 நிலை கோபுரம் முன் கொடி மரத்தில் கொடி ஏற்றி அங்குள்ள இரும்பு தூண் அருகே கொடிக்கம்பம் நடப்பட்டது. அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்காண பக்தர்கள், ‘அம்மா மாசாணி தாயே’ என உணர்ச்சி பொங்க பக்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் பக்தர்கள் அனைவரும் கொடிக்கம்பத்தை சுற்றி வந்து வணங்கினர்.

குண்டம் திருவிழா துவக்க நாள் மட்டுமின்றி, இன்று தை அமாவாசை என்பதால் கோயிலுக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்களில் சிலர் அம்மனுக்கு தங்க மலர் அர்ச்சனை, புடவை சாத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை ஆகிய இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: