ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவில் வெள்ளம்... 22 நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில், வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை கொட்டுவதால் ஆற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து விட்டது. இதனால் குவிண்ட்ஸ் லேண்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மவுன்ஸ்வில்லே நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. அங்குள்ள 22 நகரங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரண்டு லட்சத்திற்கும் அதிமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்க்கப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் போலீசாரும், ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர். ராக்ஹாம்டன் நகர் மக்கள், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நகரில் வசிக்கும் மக்கள் 77 ஆயிரம் பேர், படகு மூலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர். அந்நகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. அந்நகரில் இருந்த மக்கள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர். கடந்த நாற்பது ஆண்டுகளில், முதன் முறையாக வரலாறு காணாத அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: