எல்லைப் பாதுகாப்புப் படையில் தரமற்ற உணவு பரிமாறப்படுவதாக புகார் தெரிவித்த தேஜ்பகதூரின் மகன் உயிரிழப்பு

ஹரியானா: எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றிய போது தரம் குறைந்த உணவு பரிமாறப்படுவதாக புகார் தெரிவித்த தேஜ்பகதூரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலம் ரேவாரி நகரில் தேஜ்பகதூரின் வீடு உள்ளது. இந்நிலையில் தேஜ்பகதூரின் மகன் ரோஹித் உயிரிழந்தது தொடர்பான தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், உள்பக்கமாக பூட்டப்பட்ட அறையில் கையில் துப்பாக்கியுடன் படுக்கை மீது ரோஹித் இறந்து கிடந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

தேஜ்பகதூரும், குடும்பத்தினரும் கும்பமேளாவுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு தேஜ்பகதூர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில் எல்லைப் பாதுகாப்புப் படையில் தரம் குறைந்த உணவு வகைகள் பரிமாறப்படுவதாகப் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பான விசாரணைக்குப் பின் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: